தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானைமுடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானைஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானைசென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானைநன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானைஅரசர்…
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் 4 வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்‘ (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன்…
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் – சீனி.வேங்கடசாமி
இமயம் முதல் குமரி வரை வெற்றி கொண்ட நெடுஞ்சேரலாதன் நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர் குடிச் சின்னமாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த அரசர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ண வேண்டியுள்ளது. குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன் மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை….
செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
செந்தமிழ்தான் என் உயிர் மூச்சு! முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மொழி முப்பெரு வேந்தர் வளர்த்த மொழி மூப்பே இல்லா இளமை மொழி காப்பியமைந்து கொண்ட மொழி – தொல் காப்பியம் கண்ட தொன்மை மொழி பரணி பாடிய பண்டை மொழி தரணி போற்றும் தண்மொழி அகநானூறு தந்த அருமொழி புறநானூறு தந்த புனித மொழி வள்ளுவன் கம்பன் வளர்த்த மொழி உள்ளம் கவர்ந்த உயர்ந்த மொழி வல்லினம் ,மெல்லினம் இடையினமும் இயல், இசை, நாடக முத்தமிழும் முதல், இடை, கடை என முச்சங்கம் உயிரெழுத்து , மெய்யெழுத்து…