வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 48(2.18). அச்ச மொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 48. அச்ச மொழித்தல் அச்ச மனமுட லழிவுற நடுங்கல். அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும். அஃதறி யாமையி னந்தமென் றுணர்க. அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும். அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம். அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும். மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம். பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17). செருக் கொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 47. செருக் கொழித்தல் செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். செருக்கு என்பது தனது சிறப்புகளைத் தன் மனத்தில் பெருமையுடன் நினைப்பது ஆகும். அஃதறி யாமையி னங்குர மென்ப. அஃது அறியாமையின் அடிப்படை ஆகும். ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ஆன்மா மேன்மை அடைந்து இறைநிலை அடைவதை செருக்கு தடுத்துவிடும். அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. செருக்கு எந்தக் கட்டுப்பாட்டையும் மீறச் செய்யும். அழியு முடம்பை யளிப்பது மஃதே. செருக்கினால் உடம்பின் அழிவும் ஏற்படும். செருக்கினர்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 46. துயி லொழித்தல் உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம். உடலில் உள்ள களைப்பை நீக்குவது உறக்கம் ஆகும். அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில். அளவிற்கு அதிகமான உறக்கம் களைப்பை ஏற்படுத்தும். சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும். கனவுகள் அற்ற உறக்கம் ஆரோக்கியமான வாழ்வைத் தரும். கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும். கனவுகள் உடைய உறக்கம் நோயை ஏற்படுத்தும் 455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம். அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15). மடி யொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14) – தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 45. மடி யொழித்தல் மடிதஞ் செயல்களின் மந்த முறுதல். மடி என்பது செயல்களைச் செய்வதில் ஏற்படும் சோம்பல் ஆகும். மடிமெய்ம் முயற்சியின் மறுதலை ஆகும். மடி என்பது உடல் முயற்சியின் எதிர் நிலை ஆகும். அதாவது உடல் உழைப்பில் சுறுசுறுப்பற்ற தன்மை ஆகும். மடிதமை யொன்னார்க் கடிமைப் படுத்தும். மடி ஒருவனை அவனது பகைவர்களுக்கு அடிமையாக மற்றிவிடும் இயல்பு உடையது. மடியினை யுடையவர் குடியொடு கெடுவர். மடியுடையவன் தன் குடும்பத்தோடு அழியும் நிலை ஏற்படும்….
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 44(2.14). மறவி யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 44. மறவி யொழித்தல் மறவிதன் கடமையை மனத்திலுன் னாமை. மறவி என்பது தன் கடமையைப் பற்றி மனத்தினில் எண்ணாது இருத்தல் ஆகும். மறவியூக் கத்தின் மறுதலை யாகும். மறவி ஊக்கத்தின் எதிர் நிலை ஆகும். அதாவது உயர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை ஆகும். மறவி பலவகை யிறவையு நல்கும். மறவி பல குற்றங்களை தரும் இயல்பு உடையது ஆகும். மறவியை யடுத்தவர் மாண்பெலா மிழப்பர். மறவி என்ற குறையை உடையவர்கள் அவர்களது…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல் வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…