மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்! மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பின் அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில்…