மே நாள் – கோவைக்கோதை

மே நாள் – கோவைக்கோதை உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் – கொதித்தனர். விளைந்தது போராட்டம் – குதித்தனர். சிக்காகோ நியூயோர்க்கு  பாசுடனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேறப் போராட்டம், சிறை. உக்கிரமானது பன்னாட்டுப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையைப் போராடி வென்றனர். தொகுதியாய்க் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் நாளானது மே ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக மக்களை ஏமாற்றுபவர்கள், எப்போது தானாகத் திருந்துவார்கள், அப்போதன்றோ…

மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்

சித்திரை 24, 2048 / ஞாயிறு / மே 07, 2017 பிற்பகல் 3.00 மேநாள் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் த.மகாராசன் தமிழ் இலக்கிய மன்றம்

பொங்கி வரும் மேநாள் – தமிழ் ஒளி

  “கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” “மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கிவந்த மே தினமே!”