(மார்கழி 6, 2045 /  திசம்பர் 21,2014 தொடர்ச்சி) 10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்            திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்., 10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]      [உருவம்இல்லாததெய்வஒலி]  சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர் திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது. நுட்பங்கள்.      திருக்குறள் உலகுதழீஇய…