(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது   கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும்   புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய்   தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு   கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு           மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…