(தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இன்று அதிகாலை 4.30 –  கைப்பேசி ஒலித்தது. இது நண்பர் சம்ராசின் அழைப்பு. 1974 மே முதல் நாள் இந்த அதிகாலை நேரம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அனைவரையும் எழுப்பி விட்டு போராட்டத்துக்கு அணியமானதை நினைவு கொள்ளும் அழைப்பு. தலைவர் ஏசிகே, தோழர் இலெனின், பாலகிருட்டிணன் எல்லாரும் போய் விட்டார்கள். அந்த ஆண்டே பாலகிருட்டிணன் தூக்க்கிலிடப்பட்டார். இடைப்பட்ட ஆண்டுகளில் இலெனின் மறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஏசிகே போய் விட்டார். சென்ற ஆண்டு…