நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும் வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே! துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 42) என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு துணை…
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை
தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…
தமிழீழ நினைவேந்தல், சென்னை
வைகாசி 16, 2047 / மே 29, 2016
அறிஞர் அம்பேத்கார் பிறந்தநாள் எழுச்சிக் கூட்டம், திருவொற்றியூர்
சித்திரை 01, 2047 / ஏப்பிரல் 14, 2016 மாலை 5.00
தருசன் படுகொலைக்கு எதிரான மே 17 இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே! சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசிப் படுகொலை செய்யப்பட்ட ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தருசன் படுகொலைக்கு நீதி கேட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் தை 22, 2047 / 05-02-2016 வெள்ளி அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது. தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே! இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை. அமெரிக்கத் தீர்மானம் என்பது…
சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப் பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை. தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை. தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான…
ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்
ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015 மாலை 5.00 சென்னை ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…
நினைவேந்தல், மே 17 இயக்கம், சென்னை
வைகாசி 3, 2046 / மே 17, 2015 (படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.) படங்கள் : பதிவு
இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு! மக்கள்தீர்ப்பாயத்தில் மே17 இயக்கத்தின் சான்றாவணங்கள்!
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, செருமனியில் பிரமென் நகரில் நிலையான மக்கள் தீர்ப்பாயம் திசம்பர் 7 முதல் 10 வரை உசாவல் நடத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் தென்னிசு ஏலிடே தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில் பன்னாட்டுச் சட்ட சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகள் தொடர்பான வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் முதலான பலரும் இடம்பெற்றிருந்தனர். இத்தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு இனப்படுகொலையை…