மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்
: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…
நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்! இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆறாமாண்டு நினைவு – நீதி கேட்டுப்பேரணி, சுவீடன்
வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்பு நினைவுநாள், நெதர்லாந்து
வைகாசி 4, 2046 / மே 18, 2015
வலி சுமந்த ஆறாமாண்டு நினைவு – பிரான்சு
மாபெரும் நினைவுப் பேரணி வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்புத் துயர நினைவுநாள் – கனடா
வைகாசி 4, 2046 / மே 18, 2015
தமிழின அழிப்புநாள் துயர் நினைவுப்பேரணி – பெல்சியம்
வைகாசி 4, 2046 / மே 18, 2015
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மன்னார்குடி
வைகாசி 4, 2046 / மே 18, 2015
யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?
எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை
முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…
ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா
ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…
கனவோ நனவோ – கிரிசாசன்
கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம் பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…