இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்
இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம் மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து…
தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன்
தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன் கண்டன அறிக்கை “இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகத் தென் ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது. அதற்கான சான்றுகளையும் அந்த…
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு: குற்றச்சாட்டு தமிழ் மக்களின் சார்பாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளை விடுப்பதில் வலுவான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில் தொடங்கிய கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க்…
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 – ஈழத்து நிலவன்
கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 1/2 எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்! – அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள்! – ஈழத்து நிலவன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி அவர்களை ஒடுக்கும் வழமையான இலங்கை ஆட்சியே இதுவும் எனத் தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது மைத்திரிபால சிறிசேன – இரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகள் திடீர் இறப்புகள்,…