மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…

ப. பழனிச்சாமி எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா

அன்புடையீர், வணக்கம். 14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்),  மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். அன்புடன் காந்தளகத்துக்காக, சசிரேகா பாலசுப்பிரமணியன்

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, குமரி, 2017  வைகாசி 03 – 05, 2048 / 17 – 19 மே 2017   பங்களிப்பும் படைப்பும் வேண்டல் ஆங்கிலத்திலுள்ள முழுவிவரத்திற்கும் பதிவுப்படிவத்திற்கும்  காண்க : http://thiru2050.blogspot.in/2016/11/2017_18.html   ஆசியவியல் நிறுவனம், சென்னை உலகத்தமிழர் பேரவை, மொரிசியசு

மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு

மொரிசியசு   நாட்டில்  திருக்குறள்  தேசிய மாநாடு   மொரிசியசு  நாட்டில்  திருக்குறள்  தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல்  நிறுவனத்தின்  கூட்டுறவோடு   இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின்  முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்,  மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…

மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு

  தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது.   இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…

மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்

  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.