இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் “தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார்.  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-   தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி…