தேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி
தேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் உரூ1.50 இலட்சமும், ஆழ்துளைக்கிணறு, தரைத்தொட்டி அமைப்பதற்கு உரூ. 2.25 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம்…
ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை
ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்! தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை…
தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடி
தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான பணப்பொறி அட்டைகளின் எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம் மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால் பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர். இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர்….
மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி
மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…
ஆட்சியருக்குப் பாதி-மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சியருக்குப் பாதி!!!??? மாவட்டக் கண்காணிப்பாளருக்குப் பாதி ??? !!! நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறும் சம்பந்தம் என்பவர் 94981-65053 என்ற அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு இடர்ப்பாட்டில் உள்ளவர்களைக் கண்டறிந்து உரூ.2 இலட்சம் வாங்குவதும், தரமறுப்பவர்களை மிரட்டுவதும் என மோசடி செய்து வாழ்ந்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையங்களில் மணக்கொடை(வரதட்சணை) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 5 அல்லது 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 அல்லது 3…
கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு
தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…
தேனிச்சந்தையில் எடைமோசடி
தேனிப்பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை, காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை) வாங்கிச்செல்வார்கள். வாரச்சந்தைக்கு கொடைக்கானல், வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை…