யாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரசு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்!   இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி, தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின் பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான)…

தலைவர்-துணைத்தலைவர் மோதல்களால் ஊராட்சிப் பணிகள் பாதிப்பு

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தலைவர் துணைத்தலைவர் இடையே உள்ள மோதல்களால் ஊராட்சிப் பணிகள் பாதிப்படைந்து வருகின்றன.  தேவதானப்பட்டி அருகில் உள்ள எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலைவர்களுக்கும் துணைத்தலைவர்களுக்கும் உச்சகட்டப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான பணிகளுக்குக் காசோலையில் கையெழுத்திட தலைவர் வந்தால் துணைத்தலைவர் வருவது இல்லை; துணைத்தலைவர் வந்தால் தலைவர் வருவது கிடையாது. இந்நிலையில் சில ஊராட்சிகள் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் பெண்கள் தொகுதியாகவும், சில ஊராட்சிகள் தனி ஊராட்சியாகவும் மாற்றப்படஉள்ளன. இதனால்…