சங்கக்காலச் சான்றோர்கள்  1. அணிந்துரையும் முன்னுரையும் அணிந்துரை – பேராசிரியர் திரு. ம.சண்முக சுந்தரனார் ‘சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில் திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க…