இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! – யாழ்ப்பாவாணன்
இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே! இணைய வழித் தொடர்புகள் அடிக்கடி வந்து சேரும் அதில் வந்துள்ள மடல்களில் தன்னைக் கட்டு, தன் பிள்ளையைக் கட்டு, அழகான அக்காவைக் கட்டு, தங்கச்சியைக் கட்டு என்றவாறு விண்ணப்பங்கள் பல… ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்! மனைவிக்கும் இவற்றைக் காட்டி கதைத்துச் சிரித்து மகிழ்வேன்… இணையத்தில் இப்படிப் பல உங்களுக்கும் வந்து சேரும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்… அப்பிள் திறன்பேசி, அப்பிள் மடிக்கணினி அனுப்புவதாக ஒருத்தி கனடா விமான ஓட்டியாம் மனைவியும் உடன்பட்டாள் நானும் அனுப்பு…
நற்றமிழாலே உயர்வோம்! – யாழ்ப்பாவாணன்
நாம் பாடுவோம் தமிழைப் பாடுவோம் நாம் தேடுவோம் நற்றமிழைத் தேடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழைப் பேணவே! நாம் படிப்போம் தமிழைப் படிப்போம் நாம் எழுதுவோம் நற்றமிழில் எழுதுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வெளிப்படுத்தவே! நாம் கேட்போம் தமிழைக் கேட்போம் நாம் சொல்லுவோம் நற்றமிழில் சொல்லுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழை வாழவைக்கவே! நாம் ஆடுவோம் தமிழைப்பாடி ஆடுவோம் நாம் பாடுவோம் நற்றமிழில் பாடுவோம் நாளை நம்மக்கள் தூயதமிழுக்கு உயிரூட்டவே! நாம் நிமிர்வோம் தமிழாலே நிமிர்வோம் நாம் உயர்வோம் நற்றமிழாலே உயர்வோம் நாளை நம்முலகம் தூயதமிழைப் பேசும்வேளை!…
உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்
வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…