உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969) என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர். உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும். இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும்…
மாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்! இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்! என் மகளைப் பிரிந்த யானோ? – தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். சோழ நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வர நினைத்தான்: படை எடுத்துச் சென்றான். சோழநாட்டில் வெண்ணி என்ற இடத்தில்…