வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? – கார்க்கோடன்
வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகளைவிட அதிகம் குரல் கொடுத்து வரும், தன்னைத் தமிழ்த்தாயின் தத்துபிள்ளை என்று சொல்லிக் கொண்ட தருண் விசய், இந்தியாவின் இன-நல்லிணக்க நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும் தற்காத்துப் பெருமைபடுத்திப் பேசுவதாக நினைத்து, “ நாங்கள் (இந்தியர்கள்) இனவெறியர்கள் அல்லர். எங்களைச் சுற்றியும் கறுப்பு நிறத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இனவாதிகளாக இருந்தால் தென்னிந்தியர்களோடு எப்படிச் சேர்ந்து வாழ்கிறோம்?” என்று பேசியுள்ளார்.. அவர் பேசிய நோக்கம் எதுவானாலும், சொற்கள் தென்னிந்தியர்களை அயன்மைப்படுத்தி(அன்னியப்படுத்தி)க் காயப்படுத்துவதாக…