வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன. மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினர் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினர் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து இளைஞர் (வாலிபர்) சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன் அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை மற்றும் யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்குச் சங்கத் தலைமைச்செயலகத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்படி விண்ணப்பம் கடந்த காலப் போரின் போது தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த, தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்குப் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமூகநல அலுவலர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து…
வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தின் வீடமைப்பு அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்துஇளைஞர் சங்கத்தினால் வீடு சீரமைப்பிற்காக உரூ.50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினால் கடந்தகாலப்போரில் தன் இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு இவ் வீடு சீரமைப்பிற்கான உதவி (சித்திரை 24, 2047 / மே7,2016) வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பம் விடுத்திருந்தார். இதன்படி, வீடு சீரமைப்பிற்காக அவரது வீட்டில் சனிக்கிழமை(7/05/2016), கூரைத்தகடுகள், காரைக்குழாய்கள், கம்பிகள், வீட்டுவேலைகளுக்கான கூலி…
வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது!
வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கம் மிதிவண்டிகள், தையல் பொறி வழங்கியது! வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்)சங்கத் தலைமைச்செயலகத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு மிதிவண்டிகளும் ஒருவருக்குத் தையல்பொறியும் வழங்கப்பட்டுள்ளன. சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட்டு இந்துஇளைஞர்(வாலிபர்) சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக மிதி வண்டிகள், தையல் இயந்திரம் என்பன தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி, வட்டு மத்திய கல்லூரி, வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை, மூளாய் சுப்பிரமணிய வித்திய சாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு …
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர். எமது சங்கத்தின் ஊடாக…