புத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு
புத்தகங்களே படிக்கட்டுகள் வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும் திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின. இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார். இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எசு.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை…
புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்
புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு – வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும் இணைந்து தேசிய நூலக வாரப் பொன் விழா நடத்தின. இவ் விழாவில், பாடப்புத்தகங்கள் தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மரு.எசு.குமார் குறிப்பிட்டார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர்…
வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – மு.முருகேசு
வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று…
கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது
கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…
ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு
ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள்…
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்! வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அறிஞர் இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. …
தமிழகத்திற்காகப் பாடுபட்டவர்களை மறந்து விடக்கூடாது – கவிஞர் மு.முருகேசு
தமிழக வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது வந்தவாசி. ஆக.26. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம் இணைந்து நடத்திய நூலகர் நாள் விழா, முன்னாள் தமிழக முதல்வர் எம்ஞ்சியாரின் நூற்றாண்டு விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் முனேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை மக்கள் என்றைக்கும் மறந்து விடக்கூடாது என்று நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர் மு.முருகேசு கூறினார். இவ்விழாவில்…
மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு
வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் ஆற்ற முடியும் – கவிஞர் மு.முருகேசு- வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால் ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர்…
புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.
தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும். வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை நாள் ஆகிய முப்பெரும் விழாவில், தமிழ்த் திரையுலகில் வாழ்வின் பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும் இசையாலும் புதிய காலக்கட்டத்தைப் படைத்த அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…
வந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை
வந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை + 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள் அருவினை அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அருவினை புரிந்துள்ளனர். 2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 – 11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி,…
மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! – உலகப் புத்தக நாள் விழாவில் பேச்சு –
மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார். வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி…
பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா
50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா: சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…