கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் -ச.ம.உ. அம்பேத்குமார்
கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கும் விழாவில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை – வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கும் விழாவை நடத்தின. மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில்…
போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – மு.முருகேசு
குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா – வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016 நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன்,…
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…
ஆயுதப் போராட்ட எழுச்சியால்விடுதலை பெற்றோம் – கவிஞர் மு.முருகேசு
ஆயுதப் போராட்ட எழுச்சியால் விடுதலை பெற்றோம் – 70-ஆம் ஆண்டு விடுதலைநாள் விழாவில் கவிஞர் மு.முருகேசு பேச்சு வந்தவாசி: ஆடி 30, 2047 / ஆக. 14 அன்று, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கம், ஆசிய மருத்துவக்கழகம் இணைந்து வந்தவாசியில் விடுதலைநாள்விழா-கருத்தரங்கம் நடத்தின. இதில் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்க அறிவுரைாயளர் கவிஞர் மு.முருகேசு பங்கேற்றுப்பேசினார். இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மொழிப்போர் ஈகையாளருமான அ.மு.உசேன் தலைமையேற்றார். செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…