வெருளி நோய்கள் 1336 -1340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1331 -1335 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1336 -1340
- தூறல்தாரை வெருளி – Linyuphobia
தூறல்தாரை(shower) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தூறல்தாரை வெருளி. நீராடல் வெருளி(Ablutophobia) உள்ளவர்களுக்குத் தூறல்தாரை வெருளி – Linyuphobia வர வாய்ப்புள்ளது.
00 - தெசாசு வெருளி – Texasphobia
தெசாசு(Texas) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தெசாசு வெருளி.
தெசாசு ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இதன் தலைநகரம் ஆட்டின்/ஆசுடின்(Austin).
தெசாசு மக்கள், அவர்கள் மாநிலக் கொடி, முத்திரை, தொழில், வணிகம்,பண்பாடு,நாகரிகம் முதலானவற்றின்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்.
00 - தெயலர் வெருளி -Tayaphobia
தெயலர் சுவிஃபிட்டு(Taylor Swift) மீதான அளவுகடந்த பேரச்சம் தெயலர் வெருளி. தெயலர் காதல் வாழ்க்கை குறித்து மக்களிடையே எதிரான கருத்துகள் உண்டு. இவர் தன் கட்டுப்பாட்டை இழந்தும் பாடுவார். இவர் புகழ்வாய்ந்த இசைவாணர். எனினும் பொறாமையாலும் இவரது இசையைப் பிடிக்காமலும் வெறுப்போர் உண்டு. இதனால் இவரின் பாடல்கள் மீது பேரச்சமும் இவர் மீது வெருளியும் இவர் பற்றிய எதிர் எண்ணங்கள் கொண்டோருக்கு வருகிறது.
00 - தெரிவு வெருளி – Excirculophobia
தெரிந்தெடுக்கப்பட மாட்டோம் அல்லது அழைத்துச்செல்லப்பட மாட்டோம் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது தெரிவு வெருளி.
சிலருக்குப் பள்ளி முதல் பாடை வரை இந்தப் பேரச்சம் இருக்கும்.
excircul என்னும் கிரேக்கச்சொல்லிற்குத் தூண்டுதல் என்றும் பொருள். முன்னேற்றத்திற்குத் தூண்டுதலாய் அமையும் தெரிவை இங்கே குறிக்கிறது
00 - தெய்வ விலங்குகள் வெருளி – Theriophobia
புனைவுருவான தெய்வத் தன்மை விலங்கு( divine beast)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தெய்வ விலங்குகள் வெருளி.
செல்டா அல்லது இயெல்டா புராணம்(The Legend of Zelda) என்னும் காணாட்டத்தில் இடம்பெறும் புனைவுரு பாத்திரம் தெய்வ விலங்கு. தெய்வ யானை(Divine Beast Vah Ruta), தெய்வத் தீப் பல்லி(The Divine Beast Vah Rudania), தெய்வக் கழுகு(The Divine Beast Vah Medoh), தெய்வ ஒட்டகம்(The Divine Beast Vah Naboris) என நால்வகைப்படும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply