மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக்கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறுவடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர். உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றிற்குச் சட்ட ஏற்பு கொடுத்து நிலையாக மாற்றுவதற்கு அரசுகளே காரணமாக அமைகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான். 1829இல் இராசாராம் மோகன்ராய் துணையுடன் வில்லியம்…
சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: உதயநிதிக்கு நன்றி! உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி…
ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசியவியல் நிறுவனம் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இலிவர்பூல், இங்கிலாந்து ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018 ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! கட்டுரையாளர்களே! பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம். வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது. “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப்…