ஆளுநர் எதிர்ப்புத் தீர்மானத்திற்கு முதல்வருக்குப் பாராட்டும் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான முறையை நீக்க வேண்டலும் நேற்று (பங்குனி 27, 2054/10.04.2023) தமிழ்நாட்டுச்சட்டமன்ற வரலாற்றில் ஒரு முதன்மையான நாள். மாநிலத் தன்னாட்சிக்குக் குரல் கொடுக்கும்  வரலாற்றிலும் சிறப்பான திருப்புமுனை நாள். மேதகு ஆளுநர் திரு இர.நா.இரவியின் அடாவடித்தனமான போக்கிற்கு எதிராக முதல்வர் மு.க.தாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் சிறப்பிற்குரியது. இத் தீர்மானம் கொண்டு வந்து அவர் ஆற்றிய உரையும் வழியுரையாக அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரையும் சிறப்பானவை. இருவரையும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம். மேலிட…