மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்
மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர் மனவலி போக்கும் மருந்துகள் வாங்க மருந்தகம் முகவரி கேட்டேன் தினம் வணங்கும் இறையிடம் ; அருளால் தக்கதோர் விடைஉளம் உணர்ந்தேன். மன வோட்டத் தடம் மாற்ற மரக்கறி வளர்த்திடத் திட்டம் மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும் மருந்தகம் புழைக்கடைத் தோட்டம் ச.சுதாகர் http://subhastories.blogspot.in/ scsudhakar72@gmail.com
இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் – தமிழ் ஓவியா
இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் ஆந்திராவில் – 29 ஊர்கள் அருணாசலப் பிரதேசத்தில் – 11 ஊர்கள் அசாமில் – 39 ஊர்கள் பீகாரில் – 53 ஊர்கள் குசராத்தில் – 5 ஊர்கள் கோவாவில் – 5 ஊர்கள் அரியானாவில் – 3 ஊர்கள் இமாசலப்பிரதேசத்தில் – 34 ஊர்கள் கருநாடகாவில் – 24 ஊர்கள் மகாராட்டிரத்தில் – 120 ஊர்கள் மேகாலயாவில் – 5 ஊர்கள் மணிப்பூரில் – 14 ஊர்கள்மத்தியப்பிரதேசத்தில் – 60 ஊர்கள் நாகாலாந்தில்…
பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!
பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு! புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எங்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியருமான பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இன்று (பங்குனி 27, 2048 / 09.04.2017) பகல்பொழுதில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அ. அறிவுநம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் என அனைவரின் துயரிலும் பங்கேற்கின்றேன். முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக்…
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும்…
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….
மை வைத்துப்பார்க்கும் மக்கள்! – வேங்கடராம்
மை வைத்துப்பார்க்கும் மக்கள்! தேர்தல் வெல்வது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காற்று வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் போயோ வாக்களியுங்கள்! குருட்டு வாக்கில் மட்டும் வேண்டா! *****. வாங்கிய வாக்குகள் கொடுத்த வாக்குகளை மறக்கடிக்கக் கூடாது! ***** நேர்மை வாய்மை கடமை உரிமை வறுமை கொடுமை நன்மை திறமை செம்மை மடமை . . . போக்கச் சில மைகள் . . . ஆக்கச் சில மைகள் . ….
தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு
தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை என் தேசத்தின்… என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு… பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது…. குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல்…
செம்மை வாய்ந்த செந்தமிழ் – கிரிசா மணாளன்
செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! வடமொழி யடைத்த மாமறைக் கதவினைத் திடமுடன் திறந்த தேன்மொழி எனது! மும்மையை யுணர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த செந்தமிழ் எனது! பொல்லாப் பிள்ளையி னருளினால் நம்பிமுன் தில்லையிற் கண்ட திருமொழி எனது! ஆறுசேர் சடையா னவைமுனம் அணிபெற நீறுசேர் சேரர் நிகழ்த்திய தீந்தமிழ்! தத்துவம் யாவும் தமிழ்மொழி யுணர்த்தலால் சத்தியஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே! கிரிசா மணாளன் திருச்சிராப்பள்ளி girijamanaalanhumour@gmail.com
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ
தமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி இறைவனோடும் இவ்விகத்தோடும் இணைந்து தோன்றிட்டு காலங்களைக் கடந்து வாழ்ந்திடும் பண்பட்ட பழமை மொழி அடர்காடுகளில் கரடுமலைகளில் அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன் இயற்கையோடு இணைந்து உறவாடி வடித்திட்ட இயற்கை மொழி சொல்லொன்றை உயிர் ஓவியமாய் உகமதில் வாழும் காவியமாய் சிந்தனையைக் கடைந்து படைத்து தீட்டிட்ட தொன்மை மொழி தானே விதையுண்டு தாவரமாய் வேரோடி ஆலமரமாய்த் தழைத்திட்டு இலக்கண இலக்கியம் வளம் கொழுத்துச் செழுத்திட்ட செம்மொழி தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்…
தனித் தமிழீழம் வேண்டும்!
தமிழீழம் எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு…
அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்
அனைத்திலும் அரசியல் அறிந்திடு ஆதிக்க உணர்வை வெறுத்திடு இல்லாதோர்க்காய் உழைத்திடு ஈகைக் குணத்தை வளர்த்திடு உண்மை உழைப்பைப் போற்றிடு ஊழல் சூழல் போக்கிடு எளிமை நெறியைக் கற்றிடு ஏளனம் செய்தல் மறந்திடு ஐக்கிய மாதல் உரைத்திடு ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு ஓய்தல் நீக்கிச் செயல்படு ஓளடதம் நீயென எண்ணிடு அஃதே அரசியலென மாற்றிடு. – க.இராமசெயம் http://www.rmsudarkodi.blogspot.in/
அறிவுக் கோயில் ஞானாலயாவிற்குச் சென்றோம்! – கரந்தை செயக்குமார்
ஞானாலயா புதுக்கோட்டையில் ஓர் அறிவாலயம் – ஞானாலயா: கரந்தை செயக்குமார் கிருட்டிணமூர்த்தி நூல்களின் காதலர்ஆகி ஞானாலயா அமைக்கக் காரணமாக இருந்தவர் அவர் தந்தையே! “மூல நூல்களைப் படி” என்ற இவர் தந்தை அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை 19 அகவயைிலிருந்த இவரிடம் கொடுத்தார்; இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி. என்றார். இவர் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய்த் தொட்டுப் பார்க்கிறார். நூறு…