வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3 – இராம.கி.
(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி) 3/3 அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும். ………………………………………………………………. இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19) புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று…
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 – இராம.கி.
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 2/3 இக்கதையை 2 மாற்றங்களோடு நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருவிளையாடற் புராணங்கள் பயிலும். (இப்புராணங்கள் அமைப்பிலும் கதைவிவரிப்பிலும் முரண்படும். இராமாயணத்தில் எத்தனையோ வேற்றங்கள் – versions – உண்டல்லவா? அவைபோல இவற்றைக் கொள்ளலாம்.) திருவிளையாடற்புராணங்களில் மடைப்பள்ளி கிணறாகவும், மணம்நடத்திவைத்தது சம்பந்தரென்றும் ஏரணத்தால் முரணாகும். 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் மணம் நடத்தியிருந்தால் அவரையே புகார்ப்பெண் சான்றாக்கியிருக்கலாமே? சொல்லவில்லையே? சம்பந்தர் ஞானப்பால் குடித்தது 3 வயதிலெனில், அவர் வரலாற்றைப் பார்க்கையில், புறம்பியம் போனது 7/8 வயதெனலாம். அவ்வயதில் மங்கைக்கு அவர் மணம் நடத்திவைத்திருப்பாராவென்பது…
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 1/3 – இராம.கி.
1/3 சிலப்பதிகாரத்தில் வழக்காடுகாதையென்பது உச்சக்கட்டமாகும். உச்சத்திற்கடுத்து வருவது வஞ்சினமாலை. ஏறத்தாழ மாலை 6.30 மணியளவில் பாண்டியன்மனைக்குள் (அரசவையல்ல.) நுழைந்த கண்ணகி; ”தன் கணவன் குற்றமற்றவன்; அரசனின் நெறிமுறை பிழைத்தது; தன் சிலம்பினுள்ளிருப்பது மாணிக்கமே” என நெடுஞ்செழியனுக்குணர்த்தி வழக்காடுகிறாள். தவறுணர்ந்த அரசன், “யானோ அரசன் யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்” என மயங்கிவீழ்கிறான். இணையடிதொழும் கோப்பெருந்தேவியும் உடன் வீழ்கிறாள். கண்ணகியின் கொடுவினையாட்டம் மேலுந்தொடர்கிறது. [இங்கோர் இடைவிலகல். அடியார்க்குநல்லாருரை ஊர்சூழ்வரி வரையேயுண்டு. அதற்கப்புறம் அரும்பதவுரை மட்டுமேயுண்டு….