தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.

 தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.  தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !!

கவிதை படியுங்கள் ! தங்கம் பிடியுங்கள் !! பேரன்புடையீர் வணக்கம்.   எதிர்வரும்  ஆவணி 31,2047 / செத்தம்பர் 16, 2016, வெள்ளிக்கிழமை குவைத்து வளைகுடா வானம்பாடி நடத்த இருக்கின்ற “வெள்ளிவிழா கண்ட வெற்றித்தமிழ்க் கலைவிழா-2016” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணமாகவும், குவைத்தில் மேலும் கவிஞர்களை ஊக்குவிக்கும்  வகையாகவும்ம் ”மேத்தன்” நிறுவனத்துடன் சேர்ந்து வளைகுடா வானம்பாடி சிறப்புப் போட்டிக் கவியரங்கத்தை நடத்த இருக்கிறது. இந்த மாதம் 26 அன்று நடக்கவிருக்கும் இந்தக் கவியரங்கப்போட்டியின் இடம், நேரம் மிக விரைவில் அறிவிக்கப்படும்….

குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!   வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …