செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!

வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு!   குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக   நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.   விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…

வளைகுடா வானம்பாடி : திங்கள் சிறப்புக்கூட்டம்

குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார். வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது. மருத்துவர் திருமதி சுதந்திராதேவியின் மருத்துவ  அறிவுரைப்பகுதி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. ‘தமிழ் சமூகத்தில் காதல்’ என்று நிலவனும், ‘தமிழர்களின் ஒற்றுமை’ என்று திரு…