தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.
தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர். இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்மொழியின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம். வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள மொழியோடு இருவகை வழக்கமுள்ள…
தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை
விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…
நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்
நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுப் புதியப் பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுள்ளனர். கலைக்குடும்பத்தினர் நலனுக்கும் கலைத்துறையின் மேம்பாட்டிற்கும் ஒல்லும்வகைத் தொண்டாற்றிட வேண்டி அவர்களை வாழ்த்துகிறோம். எனினும் தாங்கள் வாகை சூடியதன் காரணம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெருமளவு பரபரப்பாக ஊடகங்களில் இடம் பெற்ற இத் தேர்தலில் இளைஞர்கள் வென்றதாகக் கூற இயலாது. ஏனெனில் வீழ்ந்த அணிணியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். கலைக்குடும்பத்தினருக்கு உதவாமையால் முந்தைய அணி தோற்றது எனக் கூற இயலாது. ஏனெனில்,…
இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது! – வைகோ
இலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது! – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் : வள்ளலாரின் தமிழ்த்தொண்டு -மறைமலை இலக்குவனார்
புரட்டாசி 21,2045 / 07.10.2014