தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்
வள்ளலார் சொல்கிறார் கங்கையிலே காவிரியிலே நூறு முறை மூழ்கி கணக்கற்ற திருக்கோயில் கால்தேயச் சுற்றி வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து பங்கமிலா வேதியர் கை பணம் அள்ளித் தந்து பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும் தயவிலார் சத்தியமாய் முக்தியதை அடைய மாட்டார். (தொடரும்)தோழர் தியாகுதரவு : தாழி மடல் 92
பாரிமகளிர் இரங்கற்பாவும் வீரயுக இலக்கியமும் – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 23/ 69 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ப் பெண்ணியக்கவிஞர்கள்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 22/ 69 இன் தொடர்ச்சி)
கவிதையைச் செதுக்கும் கவிஞர் சிற்பி – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69 இன் தொடர்ச்சி)
புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய பாடத்திட்டம் : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில் எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை. பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம்…
வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா, உள்ளகரம்,சென்னை 91
உலக மகா குரு திருவருளொளி வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா இடம் 2, இந்து குடியிருப்பு 2ஆவது குறுக்குத்தெரு உள்ளகரம், சென்னை 91 புரட்டாசி 19, 2047 -அட்டோபர் 05, 2016 காலை 10.00 : அகவல் முற்றோதுதல் 11.30: நன்னெறி உரை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ் 1.00 : சிறப்பு அன்னதானம் மாலை 6.00 : வள்ளலாரை வாசித்தேன் வாழ்க்கையை யோசித்தேன் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று வெற்றி…
நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422) மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல் நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி 3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி. “கற்றது கைம்மண்…
மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்
மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா. மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…
சங்கத்தமிழ் தந்தால் சந்தப்பா தருவேன் – ஔவையார்: நாக.இளங்கோவன்
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.” பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனைப் புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று. அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு…
இனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்! : இராமலிங்க அடிகள்
7 அன்பே கடவுள்! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே அன்புரு வாம் தேவ தேவே! “அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும் பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள் புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும் கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும்…
வள்ளலார் நூல்கள் பதிவிறக்கங்களுக்குக் கட்டணமில்லா இணைப்புகள்
வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் நூல்கள், அவர் பதிப்பித்த நூல்கள், அவர் நூல்களுக்கான பிறர் உரைகள், அவர் தொடர்பான நூல்களை இணைய வழியில் படிப்பதற்குப் பின்வரும் இணைப்புகளில் காண்க சீவகாருண்ய ஒழுக்கம் சீவகாருண்ய ஒழுக்கம் – 1 சீவகாருண்ய ஒழுக்கம் – 2 சீவகாருண்ய ஒழுக்கம் – 3 உரைநடை திருவருண் மெய்ம்மொழி அருள்நெறி பேருபதேசம் நித்திய கரும விதி உபதேசக் குறிப்புகள் மனு முறைகண்ட வாசகம் தொண்டமண்டல சதகம் வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் புத்தகங்கள்…
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர…