வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07

(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!- பாகம் – 06 தொடர்ச்சி) வழக்கறிஞரை அமர்த்தி வாதிட வக்கற்றவர்களாக இருந்தோம்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “எப்போதும் என்ன நிகழ்கிறது என்றால் ஏழைதான், ஏமாளிதான், நீக்ரோதான், கறுப்பு மனிதன்தான் தூக்கிலிடப்படுகிறான். பணம் படைத்தவன்,  வெள்ளைக்காரன் தப்பித்துக்கொள்கிறான். உள்ளபடியான இந்தப் பாகுபாட்டை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தனது…

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும்  ‘நயன்’ என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்துதான் [நயன் > நயதி > நியதி >] நீதி  என்னும் சொல் பிறந்துள்ளது. எனவே, நீதி என்பதைத் தமிழ்ச்சொல் என உணர்ந்து கையாள்வோம். ‘பதி’ என்பது தங்குமிடத்தையும் தலைவனையும்  வேறு சில பொருள்களையும் குறிக்கும். நீதி தங்கியிருக்க வேண்டிய இடம் என்னும் பொருளிலும் நீதி வழங்கும் மன்றத்தின் தலைவன்  என்ற முறையிலும்  முறைமன்றத்தின் தலைவர் நீதிபதி  எனப்படுகிறார். எனவே, நீதிபதியும் தமிழ்ச்சொல்லே!   நீதிபதியைத் தமிழ்ச்சொல்லல்ல எனக் கருதியும் ‘justice’ …

தமிழுக்காக வாதாடினால் சிறையா? வழக்குகளைத் திரும்பப் பெறுக! – திருமாவளவன்

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர்,  6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில்  வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு…

கலைச்சொல் தெளிவோம்! 6.] வழக்குரைஞரும் தொடுநரும் – இலக்குவனார் திருவள்ளுவன்

வழக்குரைஞரும் தொடுநரும்   பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் (பட்டினப்பாலை :169 – 71) பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையைடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும், என உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். எனவே, உறழ்(3) என்பது வாதிடுதல் என்னும் பொருளில் வந்துள்ளதை உணரலாம். இப்பொழுது நாம் வழக்குரைஞர் என்னும் சொல்லையே பொதுவான சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறோம். ஆட்சியியல், மனைஅறிவியல், சட்டவியல், ஆகியவற்றில் advocate…