பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல்: வழக்கும்தேவையும் – வெற்றிச்செழியன்
பேச்சு மொழியாக ஆங்கிலம் கற்றல் – வழக்கும் தேவையும் பேச்சு/உரையாடல் மொழியாக ஆங்கிலம் (Spoken English) கற்றுத்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். நீதிமன்றமும் தமிழ்நாட்டு அரசின் கருத்தைக் கேட்டுள்ளது. பலநிலைப்பட்ட தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களின் எதிர்காலம்பற்றி அக்கறையோடு செயல்படுகிற மதிப்புமிக்க பலரும் ஆர்வத்துடன் இந்த வழக்கின் போக்கைக் கவனிக்கின்றனர். பலரின் உள்ளக் கிடக்கை இந்த வழக்கு எனலாம். இந்த வழக்கு, இதில் நீதிமன்றத்தின் அணுகுமுறை, மக்களின்…
நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்
நக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் ஆளுநர் மாளிகை தேன்கூட்டில் மீது கை வைத்தபின்பும் தன்னை மாற்றிக் கொள்ள வில்லை. ஊடகத்தில் நடவடிக்கை எடுப்பதற்குரிய செய்தி வந்தது எனில் எழுதிய செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், செய்தி வெளியீட்டில் தொடர்புடைய பிறர் ஆகியோர் மீது வழக்கு தொடுப்பது வழக்கம். ஆனால், அடிநிலை ஊழியர்கள் வரை வழக்கு தொடுப்பது முதன்முறைக் கொடுஞ்செயலாகும். இதழ்களில் பல் வேறு பிரிவுகள் இருப்பதை அறிவோம். அந்தந்தப் பிரிவினருக்கு அந்தந்தப்பிரிவில் உள்ள வேலைகளை உரிய…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: தொடர்ச்சி) 13 இந்நிலையறிந்த ஆசிரியர் பெருங்குழுவும் இலக்குவனாரை அகற்றும் கொடுஞ் செயலைத் தடுக்கக்கூடிற்று. ஆங்கில மொழியில் ஓங்கிய சிறப்புப் பெற்ற வரும் நல்லுள்ளம் கொண்டவருமான சீதரமேனேன், ‘தன் கடமையைத் தவறாது செய்யும் இப்பேராசிரியர் (இலக்குவனார்) அகற்றப்படுவது குறித்து யாம் அஞ்சுகிறோம். நாளை நமக்கும் இந்நிலை ஏற்படாது இருக்குமா? ஆகவே இவரை அகற்றும் எண்ணத்தை நீக்கி, மனத்தில் அமைதியை நிலைத்திடச் செய்க’11 என்று மொழிந்தனர். ‘இலக்குவனாரைக் கல்லூரியிலிருந்து அகற்றும் செய்தியை அறிந்து மாணவர்கள்…
வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?
திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை திருமணங்கள் உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது. வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…
குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
குடந்தை மலையாள ஆலூக்காசு வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளுக்கு எதிரடி கொடுக்கும்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் (கார்த்திகை, 2045 /07-11-2011 அன்று) நடைபெற்ற மலையாள நிறுவனம் சோசு ஆலுக்காசு மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச்…
எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!
அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்! ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…