தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அறியாச் சிவனுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? நிலவளத்தையும் மக்களின் பொருள் வளத்தையும் சுரண்டிப்பிழைக்கும் சாமியார் ஒருவர், சிவனுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லியுள்ளார். தமிழ் தெரியாத மாந்தருக்கே தமிழ்நாட்டில் இடம் இல்லை என்னும்பொழுது தமிழ் தெரியாத அவரின் சிவனுக்கு இங்கு என்ன வேலை? அவருடைய சிவனுக்கே இங்கே இடமில்லாத பொழுது அவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சிவ வழிபாட்டைப் பழமையானதாகச் சிலர் கூறி வந்தாலும் தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இல்லை. “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்…
கண்ணன் வழிபாட்டைத் தமிழரிடம் இருந்து ஆரியர் கற்றனர் – சு.வித்தியானந்தன்
விட்டுணுவும் கண்ணனும் இதிகாசங்களிற் கண்ணன் விட்டுணுவின் ஓர் அவதாரமாகவும் ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கின்றான். அவனை ஒரு பெருந்தெய்வமாக அக்காலத்தில் மக்கள் கருதவில்லை. ஆரியர் தமிழரிடமிருந்தே கண்ணன் வழிபாட்டைப் பெற்றிருத்தல் வேண்டும். கண்ணன் உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த இடையர் குலத் தெய்வமே. ஆரியர் பொருளாதாரத்தில் இடையராக இருந்தபோதும் அவர்கள் நாடோடிகளே. மேலும் கண்ணன் கருமை நிறம் வாய்ந்த தெய்வமாக இருப்பதும் அவன் தமிழ்த் தெய்வம் என்று கொள்வதற்கு அறிகுறியா அமையும் எனலாம். கருமை நிற மனிதர் என்று பழைய காலத்தில் ஆரியர் திராவிடரைக்…
தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரியத்தால் மறைக்கப்பட்டன.
சில அறிஞர் சங்க நூல்களிற் சில ஆரியத் தெய்வங்கள் கூறப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, சங்க காலப் பகுதியில் தமிழ் நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறப்புற்றிருந்தது என்று கொண்டனர். இக்கூற்று ஏற்கத்தக்கதொன்றன்று. சங்கநூல்களில் விட்டுணு இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் இடையிடையே கூறப்பட்டுள்ளமை உண்மையே. ஆனால் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த முருகன், கொற்றவை போன்ற திராவிடத் தெய்வங்களே மிகவும் சிறப்புடன் வணங்கப்பட்டு வந்தனர் என்பதையும் அதே நூல்களிலிருந்து அறியலாம். தமிழருக்கே தனியாக அமைந்த வழிபாட்டு முறைகளையும் அந் நூல்களிற் காண்கின்றோம்….
பழமை மாறாத காதோலை கருகமணி வழிபாடு
தேவதானப்பட்டிப் பகுதியில் காதோலை கருகமணி வழிபாடு பழமை மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்துக்கள் என்றால் காமாட்சியம்மன் கோயில் அல்லது தங்கள் குலதெய்வக்கோயில்களிலும், இசுலாமியர்கள் என்றால் வியாழக்கிழமை வீட்டின் மேற்குப்பகுதியில் பத்தி, பூ, காதோலை கருகமணியை வைத்து தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. ஒரு சில பெண்கள் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு நேர்ந்து பக்தர்கள் காதோலை, கருகமணியை வாங்கிப் பயபக்தியுடன் தத்தம் தலைமீது தாங்கித் திருக்கோயிலை வலம் வந்து வடமேற்குத்திசையில் வைக்கின்றனர். இவ்வழிபாட்டின் நோக்கம் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், ஊர்நலம்,…