வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!
வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குறித்த…
மாவீரர்களைச்சிறப்பிப்போம்!-வவுனியா மாவட்ட மக்கள் குழு
மண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம்! கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்!! ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….
‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி!
‘காணாமல் ஆக்கப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ள உறவின் திருமணத்திற்கு ‘இரண்டாம் கட்ட’ நிதியுதவி! ‘ஆள்கடத்தல்-காணாமல் ஆக்கப்படுதல்’ நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, கல்மடு, பூம்புகார் முகவரியில் வசித்துவரும் திரு & திருமதி பழனிநாதன் – சந்தனம் குடும்பத்தினர், தமது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற வவுனியா மாவட்ட மக்கள் குழுவினரிடம் நிதியுதவி கோரியிருந்தனர். இவர்களின் குடும்ப நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு, சிவனருள் தொழில் பயிற்சி நிலையத்தினர் மனமுவந்தளித்த இருபது ஆயிரம்(20,000) உரூபாய் நிதியை, வவுனியா மாவட்டக்குடிமக்கள் குழுவின் தலைவர் கோ. இராசுகுமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஆடி…
இராணுவத்தினரது உணவகங்கள், வணிக நிலையங்களைப் புறக்கணியுங்கள்! – வவுனியா மக்கள் குழு
இராணுவத்தினரது உணவகங்கள், வணிக நிலையங்களைப் புறக்கணியுங்கள்! – வவுனியா மக்கள் குழு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வணிக நிலையங்களில், பொதுமக்களும் பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது வணிக நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம், தமிழர் தாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாகவும் – குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்குச் சென்றடையும் நிலைமைகள் தொடர்பில் ஒவ்வொரு குடிமகனும் தெளிவுற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு, தமிழர் தாயகத்தில்…