வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – மு.முருகேசு
வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று…
மறைந்த தலைவர்களின் ஈகங்களைச் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு
மறைந்த தலைவர்களின் ஈகங்களை இளைய தலைமுறையினரிடம் சொல்ல வேண்டியது நம் கடமை – கவிஞர் முருகேசு காமராசர், மறைமலையடிகள் பிறந்த நாள் விழாவில் நூலக வாசகர் வட்டத் தலைவர் பேச்சு வந்தவாசி : வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் ஆடி 01, 2047 / சூலை 16 இல்நடைபெற்ற கருமவீரர் காமராசர், தமிழறிஞர் மறைமலையடிகள் ஆகியோரின் பிறந்த நாள் விழாவில், மறைந்த நம் தலைவர்களின் ஈகங்களையும், மொழிப் பற்றையும் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியது…
தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது – கவிஞர் முருகேசு
உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது. – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 / பிப்.20, 2016 அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும்,…
வந்தவாசி வாசகர் வட்ட முப்பெரு விழா
தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்குப் பரிசளிப்பு விழா . வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம் இன்போடெக்கு கணிணி நிறுவனம், சிரீகிருட்டிணா பயிற்சி மையம், இணைந்து 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழாவினை நடத்தின. இதனை முன்னிட்டுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் கார்த்திகை 04, 2046…
சமூக ஞானத்தைப் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை!
மனிதன் மன்பதை அறிவைப் பெறுவதற்கு புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு – வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், மன்பதை அறிவைபயும் பெறுவதற்குப் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார். கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…
சசாகியின் காகிதக் கொக்கு – திறனாய்வுக் கூட்டம்
பங்குனி 10, 2046 / மார்ச்சு 24, 2015
கணையாழி வாசகர் வட்டக் கூட்டம்
பங்குனி 07, 2046 / மார்ச்சு 21, 2015
நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் – மரு.செ.வெங்கடேசன்
நாளைய தலைமுறையை உருவாக்கும் நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் மரு.செ.வெங்கடேசன் உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தை 24, 2046 / பிப்பிரவரி 7 அன்று நடைபெற்ற சிறப்புச்சந்திப்பு நிகழ்வில், நாளைய தலைமுறையைப் புத்தக வாசிப்பின் வழியே உருவாக்குகிற நூலகங்களே அறிவுத் திருக்கோயில்கள் ஆகும் என்று வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் மரு.செ.வெங்கடேசன் பேசினார். இந்நிகழ்வில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை…