வள்ளுவர் கூறும் வாய்மை-மு.ஏழுமலை கலை.மு.,
பொதுவாக உலக வழக்கில் ‘உண்மை’ ‘வாய்மை’ என்னும் இரு சொற்களையும் ஒரு பொருள் குறிப்பனவாகவே மக்கள் வழங்கிவருகின்றனர். ஆனால், இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருளைச் சுட்டி நிற்பனவாகும். உண்மை என்னும் சொல், உள்ளதை அல்லது நிகழ்ந்த ஒன்றைக் குறிப்பது. மாங்காய் புளிக்கும்; கரும்பு இனிக்கும்; மரம் முறிந்தது; இவை அனைத்தும் உண்மைகள். முயல் கொம்பு; வாடாத நறுமலர்; தேயா நிலவு; இவை இல்லாத அல்லது நிகழாத இன்மைப் பொருள்களைச் சுட்டுவன. இதனின்று உண்மை என்னும் சொல் இன்மை என்பதன் எதிர்ச்சொல் என்று…