கலைச்சொல் தெளிவோம்! 69. விசும்பு-stratus
69. விசும்பு-stratus எழிலிக்கு அடுத்த அடுக்கில் 1000 பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள பாவடி முகில் குறித்து அடுத்துப் பார்ப்போம். விசும்பு என்னும் சொல்லைச் சங்கப் புலவர்கள் 164 இடங்களில் கையாண்டுள்ளனர்; விசும்பு வானத்தையும் குறிக்கின்றது, வானத்தில் உள்ள முகில்கூட்டத்தையும் குறிக்கின்றது. முகில் என்னும் பொருளில் ‘விசும்பு’ வரும் சில இடங்கள் வருமாறு : ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட (திருமுருகு ஆற்றுப்படை : 115-116) நீல் நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் (பெரும்பாணாற்றுப்படை :…