தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910), விடுதலை
தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910) இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகியோரைப் பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் படித்த அவர் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்…
தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.
(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே! குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை…
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை- இலக்குவனார் திருவள்ளுவன்
இராசீவு கொலைவழக்கில் எஞ்சிய அப்பாவிகள் அறுவரும் விடுதலை இராசீவு கொலைவழக்கில் சிக்கித் சிறைத் துன்பத்தில் உழலும் எஞ்சிய அறுவரை உச்சநீதி மன்றம் இன்று (ஐப்பசி 25, 2053 / 11.11.2022) விடுதலை செய்தது. இராபர்ட்டு பயசு, செயக்குமார், சுதேந்திர இராசா(சாந்தன்), இரவிச்சந்திரன், சிரீஅரன் (எ)முருகன், நளினி ஆகிய அறுவரின் நலிந்த உடல்நிலை, சிறைவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள நன்னடத்தை, கல்வி, படைப்புகளில் ஈடுபடல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சட்டப்படியும் மனித நேயத்துடனும் மூன்று தலைமுறையாகச் சிறைவாழ்க்கையில் துன்புறுவதைக் கருத்தில் கொண்டும் பேரறிவாளனை விடுதலை செய்த வழியில் இந்த அறுவரையும்…
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை
இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய 2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த மறைந்த செயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூடித் தீர்மானித்தது. ஆனால் கு.பு.து.(சிபிஐ) விசாரித்த வழக்கு…
பெரியார் படி – சு.ஒளிச்செங்கோ
பெரியார் படி “பெரியார் எனும் சொல் இணைப்பரும் பெருமையையும், ஒப்புச் சொல்வதற்கு அரிய பெருமையுடையவர் என்பதை உணர்த்தும் சொல்லாகும். அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஏற்பவே பெரியார் திகழ்ந்தார்; இன்றும் ஒளிர்ந்துவருகிறார். பொருள் புலப்பட பொருள் தோன்ற கூறுதலை புலன்வனப்பு என்பர். அந்த அரிய புலன்வனப்பைப் பெரியாரின் எழுத்திலும், பேச்சிலும் காணலாம். பெரியாரின் உரைநடை என்பது தனி வகைப்பட்ட உரை நடை வண்ணமாகும். எந்த தமிழ்ப் புலமையாளர்களுக்கும் வாய்க்கப் பெறாத – பெரியாருக்கு மட்டும் இயல்பாக வாய்க்கப்பெற்ற பெரும்பேறாகும். கழுத்துப் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாது…
பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா
பொங்குக புதுமை! ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம். தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற…
தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! – பெரியார் ஈ.வெ.இராமசாமி
தன்மானத் தனித் தமிழனாக விளங்குக! “பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன். ஆதலால் பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை;…
இனமானப் பேராசிரியர் வாழியவே!
இனமானப் பேராசிரியர் வாழியவே! பெரியார் நெறியில் பிறழாப் பெற்றியர் அண்ணா வழியில் அயரா உழைப்பினர் கலைஞர் போற்றிய புலமைச் சிறப்பினர் திராவிடர் இயக்கத் திலகமாய் விளங்கி அராவிடம் அனைய ஆரியம் கடிவோர் உலைவிலா உழைப்பால் ஊக்க ஊற்று மலையினும் திண்ணிய நிலையினர் துலைநாப் போன்ற நடுநிலை நெஞ்சினர் வாய்மை வகுத்த வள்ளுவம் போற்றித் தூய்மை துணிவு நேர்மை துலங்கித் தமிழினம் தழைத்திடத் தளரா(து) உழைத்திடும் பேராசிரியப் பெருந்தகை வாழ்க! உறவெலாம் சிறக்க கிளைஞர் தழைக்க குடிவழி ஓங்குக உயர்வுடன் பொலிக நலமிகு வாழ்வும்…
குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?
குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி! வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…
ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! – ஈ.வெ.இரா., குடியரசு
ஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி! தீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக் கொலை யானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலைநாளைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். பொதுவாகத் தீபாவளி என்கின்ற சொல்லுக்கு விளக்கு வரிசை. அஃதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி…
சமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
சமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப் புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனை களைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா. சபையின் உறுப்பாகிய ‘யுனெசுகோ’ நிறுவனம் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென் கிழக் காசியாவின் சாக்ரடிசு; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்குகள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் எதிர்வாதங்களால் ஆராய்ந்து பார்த்துத் தன் அறிவுக்குச்…
ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3…