மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.”  “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.  வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…

10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் : இராமதாசு

    10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும்  சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசயா என்ற மனநலம் தாக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். உதவியற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதிமன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும்,கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.   விசயாவைப்…

தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!

இலங்கைக்குச் சுற்றுலா  புகவுச் சீட்டு பெற்று  இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும்  வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு  என்னும்   ஊரில்  தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…