கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus
72. விண்டு-Stratocumulus விண்டு விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது. விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…