துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் :  மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய்  செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய  நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த  நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த  நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…