எழில் வேந்தனுக்கு உலக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க விருது
ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது
ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்! ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…
கவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
சிறந்த சிறுகதை நூலிற்காகக் கவிஞர் மு.முருகேசிற்கு விருது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில்…
கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்
வைகாசி 06, 2048 / 20/5/17 அன்று மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இளங்குமரனார்க்குக் கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் பேராசிரியர் செல்வகுமார் விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் (பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக!) முனைவர் மறைமலை இலக்குவனார் உரையின் ஒரு பகுதி: https://www.youtube.com/watch?v=chnuQZ40dpA&feature=youtu.be
ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்
சித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00 இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’ நூல் வெளியீடு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்
முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது
முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு அன்பு பாலம் இதழ் 63ஆம் ஆண்டு விழாவில் சிறந்த அமைப்புக்கான விருதினை மூத்த வழக்கறிஞர் காந்தி புரட்டாசி 16, 2047 / 2.10.2016 அன்று பாலம். கல்யாணசுந்தரனார் முன்னிலையில் வழங்க எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன் பெற்றார். உடன் யோகா பரமசிவன், தஞ்சை எழிலன், பெ.கி.பிரபாகரன், தகடூர் வனப்பிரியன், சுப சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…
“பைந்தமிழ்ச் செம்மல்” விருது புதுவை மு.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்பெற்றது
ஆனி 04, 2047 / 18-06-2016 அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம், நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து வானவில் விழா நடத்தின. புதுவைத்தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி இவ் விழாவில் “பைந்தமிழ்ச் செம்மல்” விருது அவருக்கு வழங்கப்பட்டது. பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமர சிகாமணி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிறுவனத் தலைவர்…
தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்ப்பேராய விருதுகள் – 2016 Thamizh Academy Awards – 2016 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) திரு. இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகம், தமிழ்ப்பேராயம் – Thamizh Academy என்னும் ஓர் அமைப்பினை நிறுவித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான பல திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இணையவழியிலான தமிழ்க்கல்வி, தமிழ்ச்சமயக்கல்வி, கணிணித்தமிழ்க் கல்வி ஆகிய துறைகளின்வழி பட்டயப் படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகளை வழங்குவதோடு அரிய நூல்களைப் பதிப்பு செய்யும் பணியையும் செய்துவருகிறது. இவற்றோடு தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனைகள்புரிந்த பேரறிஞர்கள் ஆகியோர்க்கு ரூ.20,50,000 பெறுமான 11 வகை விருதுகளை 2012, 2013, 2014, 2015ஆகிய 4 நான்கு ஆண்டுகளாக…
விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க நிலை மாணவர்கள் கருத்து
விருது(SHIELD) பெறுதல் புதுமையான துய்ப்பு – தொடக்க நிலை மாணவர்கள் கருத்து 1 ஆம் வகுப்பு படிக்கும்போதே விருது (shield) பெற்றது நெகிழ்ச்சியான , மகிழ்ச்சியான நிகழ்வு – 1 ஆம் வகுப்பு மாணவி திவ்யசிரீ பேச்சு பாராட்டு விருது பெறும் நிகழ்வு அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான நிகழ்வு நண்பர்களே! தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல்…
தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!
அன்னையிடம் சென்றாயோ நண்பா! அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம். நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…