தமிழ்ப்பெயர்த் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்கிற்கான தேர்வுக்குழுவை மாற்றி யமைக்க வேண்டும்.   கேளிக்கை வரிச்சட்டம் என்பது 1939 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2006 இல் [அரசாணை (நிலை) எண் 72 (வணிக வரி -பதிவுத்துறை) நாள் 22.07.2006] தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 20.11.2006 இல் பிறப்பிக்கப்பட்ட மற்றோர் ஆணை மூலம்[அரசாணை (நிலை) எண் 147 வணிக வரி – பதிவுத்துறை நாள் 20.11..2006]   இக்கேளிக்கை வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும்…