பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர் காதை
(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி) 1. விழாவயர் காதை தமிழகச் சிறப்பு அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம் மேவலர் அணுகா வீரங் கெழுமிய காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு; ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என் றோதி ஓதி உயர்ந்ததோ…