என்றென்றும் வள்ளலார் – பொறி.பக்தவத்சலம் உரை
ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை தை 20, 2046 / பிப்ரவரி 3.2015 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பொறி.கெ.பக்தவத்சலம்
“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா
‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது. இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…
கவி ஓவியா இலக்கியமன்றம், திறனாய்வுத் திருவிழா – மன்னை பாசந்திக்குப் பாராட்டு
கவி ஓவியா இலக்கியமன்றம் திறனாய்வுத் திருவிழா “சிறுதுளியில் சிகரம்” நூலாசிரியர் மன்னை பாசந்திக்குச் சாகித்ய அகாதமியைச் சேர்ந்த முனைவர் இராமகுருநாதன் பாராட்டிதழ் வழங்கல் நாள் : ஐப்பசி 30, 2045 நவம்பர் 16, 2014 சென்னை
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு 80
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80 புரட்டாசி 11, 2045 / 27.09.2014 சென்னை காலை 9.30 முதல் நூல்கள் வெளியீடு கவியரங்கம் பல்வகை விருது வழங்கல் பொம்மலாட்டம்
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை: ஊக்கத்தொகை வழங்கும் விழா
பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சீர்காழியில் பால்சாமி (நாடார்) கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் காமராசரின் பிறந்த நாள் விழாவைக் கல்வி விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அதில் மாநில அளவில் 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்து அருவினை படைத்தவர்களையும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களையும் அழைத்து வந்து பரிசுத்தொகை கொடுத்தும் சான்றிதழ் கொடுத்தும் மாணவ, மாணவிகளைப் பாராட்டுவது வழக்கம். மேலும் பால்சாமி (நாடார்)…
தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா
அன்புடையீர், வணக்கம். தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும் இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.. முனைவர் இல. சுந்தரம் : +91-98423 74750
மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!
இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர். திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர். ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து…
கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா
சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது. (ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030) படங்கள் : முனைவர் மறைமலை இலக்குவனார் அமுதா பாலகிருட்டிணன்
பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா
வாழ்த்துப் பேழை நூல் வெளியீடு பேராசிரியர் பால் வளன் அரசு பவளவிழா ஆனி 1, 2045 / 15.06.2014 ஞாயிறு காலை பத்து மணிக்கு நெல்லை சானகிராம் உணவக மிதிலை அரங்கில் நடைபெற்றது. வழக்கறிஞர் ப.தி.சிதம்பரம் தலைமை தாங்கினார். தமிழ்மாமணி சிதம்பரப் பாண்டியன் வரவேற்றுப் பேசினார். மேனாள் மாவட்ட ஆட்சியர் மாட்சிமிகு இலட்சுமிகாந்தன் பாரதி ”வாழ்த்துப் பேழை” நூலை வெளியிட்டுப் பேசினார். தேசியப் பாவலர் த.மு.சா.காசாமைதீன் முதற் சுவடியைப் பெற்றுக் கொண்டார். தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அருள்மிகு அந்தோணிராசு முதலிய…
மெய்யப்பனார் பிறந்தநாள்விழா
மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …
கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு. இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர். இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார். இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்
தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து 10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….