தேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில், “இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில் நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற…
புகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை
தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், ஆகியவற்றை எரிப்பது பழக்கமாக உள்ளது. மேலும் தற்பொழுது புதுமை மயமாக்கலில் உருளை, தேய்வை, ஞெகிழி, செயற்கைப் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சு…