கவிஞர் வலிமை – விவேக்பாரதி
கவிஞர் வலிமை (அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்) ஊரினிலே உள்ளோ ரெல்லாம் ஊதாரித் தனமாய்த் தம்மில் பாரினையே தூக்க வல்ல பலமதுவு முள்ள தென்பார் பேரினிலே பலத்தை வைத்துப் பிதற்றிடுவோ ரல்லோம் நாங்கள் நேரினிலே நேராய் நிற்கும் நேர்மையே பலமாய்க் கொண்டோம் ! தூணையும் பிளக்க வல்லோம் துயர்தமைத் துடைக்க வல்லோம் ஆணையும் பெண்ணென் றாக்கி அழகுகள் சமைக்க வல்லோம் ! நாணையே ஏற்றி டாமல் நற்கணை பாய்ச்ச வல்லோம் ! ஏனைய செய்தி யெல்லாம் எடுத்துநான் எழுது கின்றேன் ! நரியினை வாச கன்தன்…