விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும் கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும் கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில் கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் ! செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும் செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும் சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும் சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும் சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும் சதிராடும்…