ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்!
ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! தமிழீழச் சான்றோர், தமிழீழ விடுதலைச் செம்மல் ஐயா ஈழவேந்தன் இயற்கை எய்தினார் என்ற செய்தி நெஞ்சத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொண்ணூற்றொரு அகவையில் விடைபெற்றார் என்றாலும், மனம் துயரம் கொள்கிறது. கனடா நேரப்படி 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு காலமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன் குளியலறையில் தவறி விழுந்து, தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட பாதிப்பே இறப்புக்குக் காரணம் என்கிறார்கள். தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட ஈழவேந்தனுடன், தமிழ்நாட்டில் பழகி, நட்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்புகள்…
வணக்கத்திற்குரிய நவம்பர் 27
உறவாடும் தீயே நீ வாழ்க! – சுடர் விழி
நெருப்பாகி,நெருப்பாகி, நெருப்பாகி நிமிர்வோம்.. உயிப்போடு,பொறுப்போடு, விருப்போடு நிமிர்வோம்.. நெஞ்சினில் எரியும் தீயே, ஈரம் தருவதும் நீயே.. கண்ணீர் மழையைத் தடுப்போம்.. கல்லறை வேதம் படிப்போம்.. தூங்கும் வீரர் கணவுகளில், தாங்கும் எங்கள் மனசுகளில், தேசத் தாயே நீ வருவாய்! திசைகள் வெடிக்க ஒளி தருவாய்! தலைவன் உரையைக் கேட்ககும் பொழுதே, தலைகள் மெல்ல உயரும் மலழைமுகங்கள் மௌனம் எழுத, மணியும்,ஒலியும் உலவும் தீயின் புதல்வச் சுடராய் மாற, தியாக வேள்வி தொடரும் துயிலும் இல்லப் பாடல் இந்த, தேகம் முழுக்கப் பரவும் பொறுப்புகள்…
மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் – உலக நாதன்
ஈழவிடுதலை காண்போம்! விடுதலை என்பது விடுகதை அல்ல வெற்றியும் எளிதல்ல எலியாக நாம் வளை தேடவில்லை புலியாகிப் பகைவெல்ல புறப்பட்டுவிட்டோம் தடையினை உடைப்போம் தலைவனை மதிப்போம் மனதெங்கும் நிறைவான மாவீரர் புகழ்பாடி வெற்றிகள் குவிப்போம் எடுபடையெனவே படுகளம் ஆடும் பகையது கொன்று புதியதோர் சரித்திரம் படைப்போம் வீரர் நாம் வேகம்தான் எம் மூச்சு மண்ணின் மைந்தர் நாம் மானம்தான் பெரிது கரிகாலன் வளர்த்தெடுத்த கரும்புலிகள் நாங்கள் கணப்பொழுதில் விடியல் காண்போம் கடலன்னை தத்தெடுத்த கடற்புலிகள் நாங்கள் கடலதிலும் காண்போம் விடுதலை வான்மகவு ஈன்றெடுத்த வான்புலிகள்…
மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்! ~ இ.பு.ஞானப்பிரகாசன்
[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!] பல்லவி மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங் கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும் புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான் மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு மரமானாலும்…
கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்!
கொன்றவனும் வாழ்கின்றான்! துணை நின்றவனும் ஆள்கின்றான்! வீழ்ந்தவர்கள் தாழலாமா? காலமும் மறதியும் துயரத்தை மறக்கும் மருந்துகளாகும். தனி மனிதர் என்ற முறையில் நமக்கிழைத்த இன்னல்களை மறக்கலாம்! மன்னிக்கலாம்! ஆனால், கூட்டம் கூட்டமாகப் பேரினப் படுகொலை நடத்தியவர்களை நாம் எப்படி மறப்பது? மறந்தோமென்றால் இருப்பவர்களும் அழிவதைத் தவிர வேறு வழியில்லையே! பொள்ளென நாம் சினந்து எழாவிட்டாலும் காலம் பார்த்து உள் வேர்க்கும் (குறுள் 487) மன உரமாவது வேண்டுமல்லவா? “வீழ்ச்சியுறு ஈழத்தில் எழுச்சி வேண்டும்!” எனில் “சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித்…
மாவீரர் நாள் 2045 / 2014
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
நெருப்பாய் நிமிர்ந்தான் முத்துக்குமரன்
– புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா….! தீப்பந்தம் ஆனாய் – நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை – குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை – உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு – தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு!…