வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல் வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…